சாதி முறைமை: தோற்றம், விரிவுறுதல், தற்காலத்தியப் பொருந்தாமை, ஒழித்தலின் தேவை மற்றும் ஒழித்தல் முறைகள்--PART I

We present our views about the Caste System in two parts.
Kisor Alaguvel & Pradeep Venkat
கிசோர் அழகுவேல் & பிரதீப் வெங்கட்


(பொறுப்புத்துறப்பு: இங்கு வைக்கப்படும் கருத்துக்கள் எங்களது தனிப்பட்டவை, உறுதியாக நிரூபணமாகாதவை மற்றும் புண்படுத்தும் எண்ணத்தோடு கொணரப்படாதவை. நடுவுநிலையோடு தொடரப்பட்டுள்ளது)

பாகம் 1
தோற்றமும் செயல்படு விதமும்

புராணங்கள் கூறுவதை விட்டுத்தள்ளுவோம். எங்கள் எண்ணமும் நாங்கள் ஆய்ந்த சில சிறந்த கருத்துகளும் கூறுவன: வேதங்களில் காணப்படும் சாதி முறைமை குறித்த வாக்கியங்கள் அப்போதைய காலகட்டத்தின் (கி.மு.1500 முதல் கி.பி.-யில் சில காலம் வரை) சமூகநிலையினை கூறுவதாக அன்றி அக்காலத்து மக்கள் ஒரு சீர்திருத்தமாக மேற்கொள்ள நினைத்த ஒரு செயல்முறையை விளக்குவதாகவே தெரிகிறது. இதிலிருந்து இந்து மதம் இயல்பிலேயே வேறுபாடு பாராட்டும் ஒன்றல்ல என கூற முடியும். மேலும் வேதங்களும் ஒரு குறுகிய காலத்தில், ஒரு எண்ணமுடைய மக்களால் எழுதப்பட்ட இல்லக்கியநூல் அல்ல; இரு நூற்றாண்டுகளில் இந்திய துணைக்கண்டத்தின் முழுமையிலும் பரவியிருந்த முனிவர்களின் வார்த்தைகளின் தொகுதியே வேதம் ஆகும். ஒரு சிறந்த உதாரணமாக தென்னகத்தின் அகத்திய மாமுனிவரின் சொற்கள் வேத பாடல்களில் இடம்பெற்றிருப்பதை காட்டலாம். இலக்கியங்களை தவிர்த்து தொல்பொருள் ஆதாரங்களில் இருந்து நாம் புரிந்து கொள்வதும் நாம் முதலில் கூறிய கருத்தை ஆதரிப்பதாக கொள்ள முடியும். சான்றாக மொகெஞ்ஜாதாரோ நாகரீக மிச்சக்கூறுகளை எடுங்கள். ஒரு முழு நகரமுமே இரண்டே அடுக்குகளில் தான் கட்டப்பட்டுள்ளது. ஒரு தளம் அரசு அலுவலகங்களும், நினைவுச்சின்னங்களும் நிறைந்தும், மற்றொரு தளம் முழுதும் ஒன்றே போலான மக்கள் குடியிருப்பாகவும் மற்றும் வழிபடு தலங்கள் இன்றியும் உள்ளது. இதே தள ஆதாரங்களை வைத்து இந்து மதம் முழுமையும் ஆரியர்கள் கொணர்ந்த மதம் என்பதையும் அன்றென்று மறுக்கலாம். ஏனெனில் ஆரிய மக்கள் வந்து குடியேறுவதற்கு பலநூறு ஆண்டுகற்கு முன் வாழ்ந்த சிந்து சமவெளி மக்கள் லிங்கமாக வைத்து வழிபடாவிடினும் சிவன் எனும் கடவுளை வழிபட்டுள்ளனர் என்பதற்கான கூறுகள் காணக்கிடைக்கின்றன. இவைகள் யாவும் ஒரு சமத்துவ அடிப்படை கொண்ட இந்துமத முன்னோடி உருமாதிரி இருந்ததற்கான வாய்ப்புகளை வழங்குகின்றன.


 திராவிட மொழி தொகுதியின் தற்போதைய பரவல்

இந்து மதம் இயல்பிலேயே பன்மைவாதத் தன்மை கொண்டது. இப்போதைய இந்துமதம் புலம்பெயர்ந்து இங்கு வந்த ஆரியர்களும் இங்கே பூர்விகக் குடிகளாக இருந்த (அல்லது அதற்கு முன் இங்கு குடிபெயர்ந்திருந்த) திராவிடர்களும் கொண்டிருந்த ஒட்டு மொத்தம் ஆகும். ஒருவரால் இந்து மதம் பாகுபாடு பாராட்டும் சமத்துவ தர்மமில்லாத மதம் என்று கூறமுடியும் பொழுது, அதே மதத்தை அனைவரையும் உட்கொள்ளும், சமத்துவம் பாராட்டும் ஒன்று எனவும் இலக்கியத்தில் உள்ள, குறிப்பாக சங்ககால ‘ஒரு பிறப்பு’ மற்றும் தோழமை பாராட்டும் கருத்துக்களை கொண்ட இலக்கிய வரிகளை கொண்டு கூறலாம். சங்ககால தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள எண்ணங்களை வரலாற்றை  ஆராய்ந்திட வாத ஆதாரமுடைய காட்சிக்கோணங்களாக கொள்ள முடியும் ஏனெனில் தெலுங்கு மொழியுடன் எழுத்துப்பூர்வ மொழிகளுள் மிகப் பழமையானதும், பரந்த பரப்பில் பேசப்பட்டதும் தனித்தன்மை கொண்டதும் புலம்பெயர்ந்திங்கு வந்தோர் பேசிய மொழிகளின் குறைந்தபட்ச தாக்கம் கொண்டதுமான மொழி தமிழாம். உண்மையில் இப்போது கீழ்சாதி அல்லது சாதியற்ற (என்றழைக்கப்படுகிற) மக்களை குறிப்பதற்கு பயன்படுத்தப்படும் ‘தலித்’ எனும் சொல் வடமொழி வேர் கொண்டதே ஆகும். திராவிட மொழிகளில் எந்த ஒரு குறிப்பிட்ட மக்கள் பிரிவை உணர்த்தவும் அத்தகைய நேர்பொருள் கொண்ட சொல் இல்லை. நாம் சில குணாதிசயங்களுக்கு தமிழ் மொழி இலக்கியங்களை மேற்கோள் காட்டுவது என்றால் நம்மால் கண்டறிய முடிந்த வரிகள் அங்குள்ளன என்றே தவிர அங்கு மட்டுமே உள்ளது என்று புரிந்துக்கொள்ள கூடாது. தற்போதைய திராவிட மொழிகளின் நிலவியல் பரவலும் அவற்றின் மிகுதியான தாக்கம் நவீன கால இந்தி, மராத்தி முதலான வடமொழிகளில் இருப்பதும் நாம் இதுவரை கூறியிருந்த கருத்துக்களை ஆதரிப்பதாகவே உள்ளன. அவை இந்திய துணைகண்டம் முழுமையும் திராவிடர்கள் வாழ்ந்து வந்தனர் என்பதும், தற்காலத்திய வட இந்திய மக்கள்தொகை முழுமையும் பூர்வகுடிகளும் புலம்பெயர்ந்தோரும் கலந்தது என்பதும் ஆகும். சிலர் ஆரிய இனத்தவரை இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னர் இன்னமும் தனி இனமாகவும் ஆக்கிரமிப்போராகவும் அரசியல் காரணங்களுக்காக சித்தரிக்கின்றனர். உலகின் எந்த இனமும் கலப்படம் ஆகாத ஒன்றாகவும் ஒரு நிலப்பரப்பை தங்களுடையதென்றும் உரிமை கொண்டாட முடியாது. அப்படி முடியுமென்றால் தற்போதைய முழு மனித இனமும் (Homo Sapiens) ஆப்பிரிக்க கண்டத்திற்கு மட்டுமே தொன்முதுவர் எனும் பொழுது எல்லா கண்டத்திலும் பரவி உள்ளது எவ்வாறு? இம்மனித இனத்தின் (Homo Sapiens) வரலாற்றை சுருக்கி கூறினால் அது இடம்பெயர்தலின் வரலாறாகவே இருக்கும். மனிதர்கள் செய்யும் மிக இயல்பான செயல்களில் இடப்பெயர்தலும் ஒன்று. அவ்வாறு இடம்பெயர்வதின் மூலமே நாம் முன்னேறியும் வந்துள்ளோம்.


திராவிட மொழி குடும்பத்தின் வயதும் தனித்தனி பரவு எல்லைகளும்


இங்கு நாம் பார்க்க வேண்டிய மற்றொரு பொருள் சில அறிஞர்களின் கருத்தான சிலைவழிபாடு இந்திய துணைக்கண்டத்தில் என்றென்றும் இருந்ததில்லை என்பதும் அது வெளியிலிருந்து நம் கண்டத்திற்கு கிறித்து பிறப்பதற்கு மிக முன்னர் அல்லாது கொணரப்பட்டிருக்க வேண்டும் என்பதும் ஆகும். இதன் மூலம் இந்து மதம் இயல்பிலேயே சிலைவழிபடு முறையற்ற ஒன்று என்பதையும் அறியலாம். இங்கு நாம் புரிந்துகொள்ள வேண்டியது இந்த முறை நுழைதலின் இரு பக்கங்களையும் தான்: சிலை வழிபாடு முறை ஒரு இணைப்பு சக்தியாகவும் அதே சமயம் பிரிப்பு காரணியாகவும் செயல்படும் தன்மை உடையது. ஏனெனில் கடவுளை உருவமாக பார்த்திட பெரும் எண்ணிக்கையில் வருவோர் ஒரே இடத்தில் கூடவும், பண்டிகைகள் உருவாகவும் வாய்ப்பு கிடைக்கும் எனினும் அச்சிலைக்கு சேவை செய்திட ஒரு குறிப்பிட்ட பிரிவினர் உருவாக்கப் படுவது தவிர்க்கலாகதது. இது ஒரு தொழிலாக உருவெடுக்க இதே போல் மற்ற தொழில் செய்வோரும், அரசாட்சி செய்வோரை தவிர, தனித்தனியே பிரிவுகளாக சேர்ந்திட ஆரம்பமாக அமைந்தது. வெளிப்படையாக, அத்தகைய சமூக முறையில், துணைக்கண்டத்தின் பெரும் பரப்பும் பல கலாச்சாரங்களும் வேறுபட்ட  (பல எண்ணிக்கையிலான  தொழில் வகைகளை ஊக்குவிக்கிற) பூகோள அமைப்பியலும் சேரும் பொழுது பொருளாதார ஏற்ற இறக்கங்கள் எழுவது சாதாரண மாற்றமே. அப்பிரிவுகளில் கடவுள் சேவையின் நீட்சியாக அக்காலத்தில் பார்க்கப்பட்ட கல்வியிலும் அறிவுசார் துறைகளிலும் ஈடுபடும் பிரிவு வரிசை முறையில் முதலிடம் பிடிப்பது புரிந்துகொள்ளத்தக்கதே. ஏனெனில் அரசனுக்கு அறிவுரை கூறும் பதவியிலுள்ளவர் இவ்விரண்டு துறைகளில் தேர்ச்சிப் பெற்றவராக இருத்தலே தருக்கம். அரசர் குலம் உருவாவதையும் ஒரு குலத்திற்குள் பல கிளைகள் உருவானதையும் பண்டைய மனித வரலாறு மற்றும் மானுடவியல் மூலம் விளக்கலாம். முற்கால வேட்டையாடல்-திரட்டல் முறையில் உணவுத்தேவை பூர்த்தி செய்து வாழ்ந்திட்ட மனிதர்கள் நிலத்தை மையமாக வைத்து எதிரெதிர் குழுக்களாக பிரிந்து வாழ்ந்த போது போர்கள் நடந்தேயிருக்க வேண்டும். எனவே தங்களை வழிநடத்த தலைவர்களை கொண்டு இயங்க ஆரம்பித்து பின் தலைவர்கள் தனி இனக்குழு ஆக வழிசெய்தது. மேலும், அத்தகைய வேட்டையாடல்-திரட்டல் முறையில் ஈடுபடும் குழுக்கள் தத்தம் குழுக்களின் அடையாளமாக அவர்கள் புனிதமாக கருதிய ஒரு விலங்கு அல்லது பறவயினையோ (சரியாகச் சொன்னால் அவர்கள் உணவு சங்கிலியில் அத்தியாவசிய அங்கமாக நினைத்த ஒன்றை) கொண்டு அதனை கண்டு வழிபடவும் அதற்கென ஒரு பண்டிகைதினம் வைத்து கொண்டாடவும் செய்தனர். இந்த சடங்குகள் காலம் ஓட அவ்வினக்குழுவின் தலையவர்களின் தோற்றம் குறித்த மரபுவழி கதைகள் விலங்கினங்களை இணைத்து உருவாக காரணமாக அமைந்தது எனலாம். இதனை வைத்தே இனக்கிளைகளின் பெயர்களே கூட விலங்கு அல்லது பறவை பெயர்களாக இப்போதும் இருப்பதை விளக்கலாம். அருகருகே வாழ்ந்திருந்த இனக்குழுக்கள் தங்களின் அடையாள விலங்கினத்தை மற்றவர் வேட்டையாடினால் எதிரிகளாக மாறினர் அல்லது வெவ்வேறு ஆர்வங்கள் இருந்தால் கலப்பு மணம் முடிப்பவர்களாக மாறினர். எனவே, தொழிலை வைத்த சாதிமுறை வந்தேயிருக்காவிட்டாலும் மக்கள் அப்போதும் அவரவர் கடந்தகால வரலாறு மற்றும் மரபுகளை கொண்டு பிரிந்தே இருப்பர். ஆனால் அம்மாதிரியான பிரிவுகள் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளாக மாறியிருப்பது கடினமே. பேரரசுகள் மத்தியகால இந்திய துணைக்கண்டத்தில் அளவில் பெரிதாய் வளர ஆரம்பித்த போது, தனிவகை சிறப்பு தொழில்களின் தேவையும் அதிகரித்தன. இதன் விளைவாக புதிதாக உருவான தொழில்களும் கூட அவற்றின் பொருளாதார வெற்றிவாய்ப்பு நிலையினை அடிப்படையாக வைத்து சமூக வரிசை முறையில் அதற்கான இடம் பிடித்தன. ஒரே வகையான தொழிலுள் கிளை சாதிகள் வளர்ந்த விதம் இவ்வாறென கூற முடியும்.

எனவே, இவை யாவற்றிலும் இருந்து நாம் ஒரு யோசனையாக முன்மொழிவது (யோசனையாக மட்டுமே) என்னவென்றால் வட இந்தியாவில் சிந்துவெளி நாகரிகம் அழியும் காலத்திலோ அல்லது அழிந்த பின்னரோ வந்த ஒரு புலம்பெயர் குழு மற்றும் பூர்வகுடி இரண்டின் இணைப்பில் உருவான இந்திய-ஆரிய மக்கள்தொகை தங்களுக்கென ஒரு வரைமுறை கொண்டு ஒருங்கிணைந்திட (ஒரு கலக, குழப்பகாலத்திற்கு பின்னாக இருக்கலாம்) உருவாக்க எத்தனித்த முறை தொழில்முறைகளை மற்றும் சில தெரியா காரணங்களை அடிப்படையாக வைத்து அமைந்தது. நாம் அந்த பிரிவினையின் நோக்கத்தை எதிர்க்கவும் இல்லை ஆதரிக்கவும் இல்லை; நமக்கு அதன் நோக்கம் குறித்த ஆதாரம் ஏதும் இல்லாத போது அது பற்றி கருத்துரைப்பது இயலாதது. சிந்து சமவெளி நாகரிகம் சரியாக ஆரியர்களின் வருகையின் போது அழிய நேர்ந்ததால் சிலர் இவ்விரண்டு நிகழ்வுகளையும் இணைத்து பார்ப்பர். எனினும் சமீபத்திய பல்கலைக்கழக ஆராய்ச்சிகள் அந்நாகரிக மக்கள் பெரிய அளவிலான வெள்ளத்தால் அல்லது சிந்துநதி பாதை மாறியதாலோ அல்லது இமாலயத்தில் ஏற்பட்ட நீண்டகால வறட்சியினாலோ இடம்பெயர நேர்ந்திருக்கலாம் எனும் முடிவுகளை அளிக்கின்றன. இந்த கண்டுபிடிப்புகள் ஆரிய தாக்கத்தினால் சிந்து நாகரிகம் அழிந்ததாக கூறப்படும் கருத்துக்களை சவாலாக்கினாலும் நம் முன்மொழிதலான அப்போதைய வட இந்திய மக்கள்தொகை வருவோருடன் கலந்து கலாச்சாரம் ஒன்றாகியிருக்கலாம் என்பதை பொய்யாக்கவில்லை. கூடுமானவரை நடந்திருக்கக்கூடியது என்னவென்றால் மேற்கூறிய இரண்டும் ஆகும். ஏனெனில் சிந்து நாகரிகம் போன்ற பெரிய பரப்பில் செழித்திருந்த நாகரிகம் வேண்டுமென்றோ அல்லது வேறு மாதிரியோ வந்தேறும் மக்களால் அழிக்கப்பட்டது என்பது சாத்தியமில்லாதது. கிராமப்புற பகுதிகள் புதிதாய் வரும் மக்களை சந்தித்திருக்கலாம் மற்றும் அவர்களுடன் நிலம் சார்ந்த சச்சரவுகள் வந்திருக்கலாம். நாம் சொல்ல வருவதெல்லாம் இந்த சாதி அமைப்பு நமக்கு நாமே கிறித்து பிறப்புக்கு மிக முன்னரல்லாது வரவழைத்த மாற்றங்களின் வினைமுடிவே என்பதாகும். கிறித்து சகாப்த 10ஆம் நூற்றாண்டு வாக்கில் இம்முறை துணைக்கண்ட முழுமைக்கும் பரவியிருந்தாலும் அதன் தீய விளைவுகள் இன்னமும் வளர்ந்திருக்கவில்லை. இம்முறை தெற்கிந்தியாவிற்கு பெரும் வடக்கிந்திய பேரரசுகள் காலங்களில் ஒன்றுபட்டு துணைகண்டம் இருந்த பொழுது ஏற்படும் கலாச்சார பரிமாற்றங்கள் மூலம் பரவியிருக்க வேண்டும். இருப்பினும் தென்கோடியிலுள்ள சில பகுதிகள் (தற்போதைய கேரளம் மற்றும் தமிழகம்) அத்தகைய பேரரசுகள் கீழ் இருந்ததில்லை எனும் பொழுது ஏற்கனவே வேறு மாதிரியான வேற்றுமை பாரட்டாத பிரித்தாளும் முறை இருந்துள்ளது என பொருள் கொள்ளலாம். சில தென்னிந்திய அரசர்கள் (மரபு கதை மற்றும் புராணங்களில்) வடக்கிலிருந்து கடவுள் சேவை செய்யும் மனிதர்களை தம் இராச்சியத்திற்கு கொணர்ந்ததாக சொல்லப்படுவதும் உண்டு. எவ்வாறு இருப்பினும் துணைகண்டத்துள் அக்காலங்களில் நுழைந்தோரை (ஆரியர் எனப்படுவது அவர்களின் சுமேரிய பேரரசில் இருந்த பூர்வீக நிலத்திற்கு இருந்த பெயராகவே இருந்திருக்க வேண்டும்) இன்னமும் ஒரு தனி இனமாக கூறி அவர்களை வெளிநாட்டவர் என குறிப்பிடுவது முழுதும் ஆதாரமற்ற மற்றும் உள்நோக்கம் கொண்ட செயலே. உண்மையில், அம்பேத்கரும் கூட இவ்விடயத்தில் யாரும் கொண்டிராத ஒரு கருத்தான ஆரியர்கள் அப்படியே இன்றும் ஒரு இனமாக இருக்கக் கூடுமானால் அவர்கள் ‘சூத்திரர்’ என்றழைக்கப்படும் கீழ்சாதி (என குறிப்பிடப்படுகிற) சமூகத்தினராகவே இருத்தல் வேண்டும் என்பதை நம்பினார். அவரே சிந்து சமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் எனும் கொள்கையினை ஆவேசமாக எதிர்த்தவரும் திராவிடரே இந்நிலம் முழுதும் வாழ்ந்திருக்க வேண்டும் என முன்மொழிந்தவரும் ஆவார். நாம் கூறுவது சில மக்களை வெளிநாட்டவர் என நம்மால் குறிப்பிட முடியும் எனும் பொழுது எழுப்பக்கூடிய தகுந்த மறு கேள்வி ‘யார் வெளிநாட்டவர் இல்லை?’ என்பதாம்.

ஆனால் சாதி முறைமையின் இருப்பை வைத்தே அது எப்பொழுதும் வரிசை முறை, சுரண்டல் மற்றும் தீண்டத்தகாமை போன்ற காரியங்கள் கொண்டே இருந்துள்ளது என கூற இயலாது. நாம் கருத்தில் எடுத்துக்கொள்ளும் ஆட்சியினை பொறுத்தே இத்தன்மைகள் அமைந்தது. வேதமுறைப்படி பிரித்தாண்டாலும், அமைதியாகவும் இணக்கமாகவும் சமூகத்தை வைத்திருந்த அரசர்களும் உண்டு. இந்திய நாகரிகத்தை குறை கூற முடியாது ஏனெனில் உலகில் எங்கும் சுயமாய் இயல்பாய் வளர்ந்திட்ட கலாச்சாரங்கள் ஏதேனும் ஒரு முறையிலான வேறுபாடு அல்லது பாகுபாடு இருந்தே தீருகிறது. ஒரு தனி, சுதந்திரமான மற்றும் நல்லறிவுடைய மனிதன் ஏதோவொரு கடந்தகால நிகழ்வுகளின் விளைவாய் தோன்றிய வேறுபாடுகளை மறந்து நிகழ்காலத்தில் வாழ்வான். ஆயினும் ஒரு பின்னிப் பிணைந்த சமூகத்தில் வாழும் பொழுது தனிமனித மாற்றங்கள் பெரிதாய் சாத்தியமில்லாதது.

PART II IS TO BE CONTINUED IN THE NEXT POST..

Kisor Alaguvel & Pradéep Venkat 
Keep visiting and tell us what you think in the comments... 


Comments

Other Popular Posts