ஏறு தழுவல்: ஒரு அறிவார்ந்த பாரம்பரியம்


ஜல்லிகட்டு (அ) ஏறு தழுவல்

ஒரு அறிவார்ந்த பாரம்பரியம்

நம் தமிழ்நாட்டின் மேற்கத்திய மற்றும் சில தென் மாவட்டங்களில் விளையாடப்படும் ஒரு விளையாட்டு அல்லது சரியாகச் சொன்னால் பின்பற்றப்படும் பாரம்பரியம் ஜல்லிக்கட்டு. இன்று அது ஒரு கடந்தகால நினைவாக மாறிவிடக்கூடிய அபாயத்தில் இருப்பது முடிபு அல்ல. மேற்கத்திய வியாபார முதலைகள் கிழக்கத்திய பாரம்பரியத்தை விழுங்கிக் கொண்டிருப்பதின் அறிகுறி. உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தடை உத்தரவை விட அதற்கு கூறப்பட்ட காரணம் தான் ஏற்றுக்கொள்ள முடியாது: "விளையாட்டு எனும் பெயரில் மனிதர்களின் வெற்று பொழுதுபோக்கிற்காக காளைகள் கொடுமைப்படுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது." 
அப்படியானால் குதிரை ஓட்டம் எந்த விதத்தில் இந்த விளக்கத்திற்குள் வராது? ஜல்லிக்கட்டு மத உரிமைகளுக்குள் (article 25) வராதவாறு திட்டமிட்டு பார்த்துக்கொள்ளப் படுகிறது. அந்த அறிவாளி நீதிபதிகளை மத அடிப்படை இல்லாத பண்டிகை ஒன்றை காட்டச் சொல்லவேண்டும். ஜல்லிக்கட்டு என்பது விளையாட்டு நோக்கில் பார்த்து அழைக்கப்படும் பெயர். பொருத்தமான பெயர் ஏறு தழுவல் என்பதே. ஜல்லிக்கட்டில் சிறத்த காளைகள் மட்டுமே இனவிருத்திக்கு அனுப்பப்படும். சிறந்த மற்றும் அதிக வீரியமுள்ள மாடுகளின் 'ஜீன்கள்' மட்டுமே அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவதை உறுதி செய்யும் அறிவியல் ஜல்லிக்கட்டு. உண்மைதான், ஜல்லிக்கட்டு தமிழ்நாடு அல்லது இந்தியா முழுவதும் வாழ்பவர்கள் எல்லோராலும் பொதுவாக பெறப்படாத ஒரு உணர்வே.  ஆனால் நாம் ஒன்றுபட்டு நம் நாட்டிற்காக அல்லது நம் நாட்டுக் காளைகளுக்காக நின்றே ஆகவேண்டிய சூழ்நிலை உள்ளது. கேட்கலாம், கலாச்சாரம் மண்ணாங்கட்டி எல்லாம் வைத்துக்கொண்டு என்ன பயன்? எது இன்று சோறு போடுகிறது? நானும் கேட்கிறேன், எஜமானன் சோறு போட்டால் பெற்ற அம்மாவை விட்டு போய்விடுவோமா? சோறு போடுவதால் இரண்டும் ஒன்றா என்ன? ஆங்கிலம் சோறு போடலாம். ஆனால் அது வெறும் ஒரு மொழி. தமிழ் என்பது மொழி என்பதை விட அது ஒரு அறிவு ஆகும். மதத்தை உள்நுழைக்க வேண்டாம் ஏனெனில் மதத்திற்கெல்லாம் அப்பாற்பட்டது நம் தமிழ்.

ஒரு 2000 ஆண்டுகால வரலாறு கொண்ட பண்பாடு இன்று "தமிழர்கள் எனும் மிருகக் கும்பல் வெற்று இன்பத்திற்காக செய்யும் மிருகவதை"யாக பார்க்கப்படுவதுதான் சோகம். அதிலும் மிக வருத்தமளிக்கக் கூடிய ஒன்று அந்நிய சக்திகள் மட்டுமில்லாது நம்மவர்களே இதைப் பற்றிய புரிதல் இல்லாமல் இந்த நிலைக்குக் காரணமாய் இருப்பதே. என் இரு நண்பர்கள் என்னிடம் பேசியபோது ஜல்லிக்கட்டை அவர்கள் ஜல்லிக்கட்டை அணுகிய விதம் என்னை திடுக்கிடச் செய்தது: "இந்த வெளையாட்டெல்லாம் வெளையாடி இவனுங்களுக்கு என்ன வந்துச்சு..அறிவு கெட்டவனுங்க." என்ன வரவேண்டும்? விளையாடினால் அந்த தடை கோருபவர்களுக்கு என்ன வராது? இதுவரை மனிதர்க்கு தெரிந்ததிலேயே பழமையான விளையாட்டான ஜல்லிக்கட்டு, PETA போன்ற அமைப்புகளின் வியாபார காரணங்களுக்கு அடிபணிவது வெட்கத்தக்க ஒன்று.

மிருக நேசிப்பா?

ஒரு மாடு படும் 'துன்பத்தை' பொறுத்து கொள்ள முடியாதவர்கள் அதே நாட்டில் இருந்து கொண்டு KFC போன்ற நிறுவனங்கள் கோழிகளை வெறும் சதையாக வளர்த்து குத்தி குதறி மசாலா தடவி விமானம் ஏற்றி அனுப்பும் அக்கிரமத்தை பார்க்கவில்லை.

People are readily taking medicines that were tested before in animals. Where went the bleeding heart of PETA in this?

 யார் மிருக நேசிப்பாளன்? 300 ரூபாய்கள் சம்பாதித்து அதில் தினமும் 100 ரூபாய்களை தன் மாட்டுக்கே செலவழித்து மீதியில் தன் குடும்பத்தை நடத்துபவனே மிருக நேசிப்பாளன். இந்த அற்ப பதர்களை போல் வழக்குக்கு செலவு செய்து ஒரு இனத்தையே அழித்தாவது இலாபம் எடுக்க நினைப்பவர்கள் மிருகவதை தடுப்பாளர் என அழைத்துக்கொள்வதும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதும் அசிங்கம். இந்த PETA அமைப்பின் மீதே பல குற்றச்சாட்டுகள் உள்ளன. விலங்குகளை பாதுகாப்பதாய்க் கூறி அடைக்கலம் கொடுத்து இலட்சக்கணக்கான பிராணிகளைக் கொன்று மருத்துவ ஆராய்ச்சிக்கு அனுப்புவதும், அரைநிர்வாண 'மாடல்'களை நிறுத்தி பிரபலபடுத்துவதும் நிரூபணமான ஒன்று.




  இதில் இன்னும் வேடிக்கை என்னவென்றால் சில சினிமா நடிகர்கள் தாங்கள் புனிதமான செயல் செய்வதாக நினைத்துக்கொண்டு PETA அமைப்புக்காக சமூக வலைதளங்களில் வக்காலத்து வாங்குகின்றனர்.














இன்றைய நிலை

Tractorகளின் வருகைக்கு பின் மாடுகள் உழவுக்கு பயன்படுவது கிட்டத்தட்ட நின்றுவிட்டாலும், பசுக்கள் கருத்தரிப்பு செய்வதற்கு artificial insemination தொழில்நுட்பம் வந்து நாட்டு மாடுகளின் தேவை கிட்டத்தட்ட முடிந்தே விட்டாலும் இன்றும் ஜல்லிக்கட்டு உயிர்ப்புடன் விளையாடக் காரணம் மாடுகளை தங்கள் சொத்தாக பெருமையாக மக்கள் நினைப்பதே. ஜல்லிக்கட்டு என்பது விவசாயம் புரியும் மனிதனுக்கும் அவனுடைய விலங்குகளுக்கும் உள்ள--ஒரு நகரத்து மூளையால் புரிந்து கொள்ள முடியாத--இணைப்பே ஆகும். ஒருவேளை ஜல்லிக்கட்டு முற்றிலும் தடை செய்யப்படுமானால் நாட்டு காளைகளை நாம் அழிய விடுவதைத் தவிர வேறு வழியில்லை ஏனென்றால் காளைகளை வளர்ப்புப் பிராணிகளாக வளர்க்கும் அளவு வசதி படைத்தவர்கள் இங்கு இல்லை மற்றும் இங்கு இல்லை என்பதும் அந்த அமெரிக்கப் பிச்சைக்காரர்களுக்கும் தெரியும்.
1990களில் 10 இலட்சமாக இருந்த காங்கேயம் காளைகளின் எண்ணிக்கை தற்போது 15000ஆக சுருங்கி உள்ளது மிக கவலை அளிக்கும் ஒன்றாகும். காளைகள் அழிந்து விட்டால் நாட்டு மாடு என ஒன்று இல்லாததாகி செயற்கை கருவூட்டலுக்கு  (artificial insemination) வெளிநாட்டை எதிர்பார்ப்பது மட்டுமே பசுக்கள் கருத்தரிப்பதற்கு ஒரே வழியாகி விடும். . மானம் உள்ளவர்களிடம் பணம் பெரும்பாலும் இருப்பதில்லையே. காங்கேயம், புளிக்குளம், ஆலம்பாடி, அம்பளச்சேரி, பர்குர் ஆகிய ஐந்து தமிழ்நாட்டுக்கே உரிய மாட்டு இனங்களில், தமிழ்நாடு விலங்குகள் மற்றும் விவசாய அறிவியல் பல்கலைக்கழகத்தின் (TANUVAS) கூற்றுப்படி, ஆலம்பாடி இனம் முழுமையாக அழிந்தே விட்டது.  ஸ்பெயினின் தேசிய விளையாட்டான காளை அடக்குதல் போல் போட்டி முடிந்ததும் காளையைக் கொன்று விடாமல் ஒரு குடும்பத்து உறுப்பினராகவே வளர்க்கப்படுகிறது.மாடுகளின் வால்கள் கடிக்க படுவதாகவும் சாராயம் கொடுக்க படுவதாகவும் கூறும் இந்த பாழாய் போன விலங்கு ஆர்வலர்கள் மாட்டை முன் பின் பார்திருப்பார்களா என்பதே நிச்சயமில்லை. ஒரு பளுதூக்கும் வீரர் ஊக்க மருந்து உண்டு பிடிபட்டால் பளுதூக்கும் விளையாட்டயே தடை செய்துவிடுவோமா?
 ஒரு இனம், பாரம்பரியம் இவற்றுக்கெல்லாம் இல்லாவிட்டாலும் அல்லது ஜல்லிக்கட்டு ஒரு உணர்வு என்பதற்காக இல்லாவிட்டாலும் இப்போது உயிரோடு உழன்று கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான காளைகளின் உயிருக்காகவாவது போராட வேண்டும்.
பெரும்பாலான ஜல்லிக்கட்டு காளைகள் கோவில் காலைகளாக இருப்பதால் அவை உணவாக வாய்ப்பில்லை எனினும் அவைகளின் இடத்தை அடுத்த காளை நிரப்புமா என்பதே கேள்விக்குறி. ஒரு சில உண்மையான முயற்சிகளையும் பாராட்ட வேண்டும். Hip Hop ஆதி போன்றோர் தன் இசை மூலம் விழிப்புணர்வு பரப்புவது குறிப்பிடத்தக்கது.

It is very unfortunate that some animal rights activists equate Jalli kattu with bull fights of Spain, Portugal, Argentina etc. where, the bull is teased, tortured and killed. Whereas Jalli kattu honors the bull!

Not a single sportsman died after TN govt. enacted Jallikattu act. Not a single bull has died ever in the history.

It's more than just a sport.

 Jallikattu Needs (Y)our Support !!!
#SaveBulls






Comments