சாதி முறைமை: தோற்றம், விரிவுறுதல், தற்காலத்தியப் பொருந்தாமை, ஒழித்தலின் தேவை மற்றும் ஒழித்தல் முறைகள்--PART II
|
கிசோர் அழகுவேல் & பிரதீப் வெங்கட்
(பொறுப்புத்துறப்பு: இங்கு வைக்கப்படும் கருத்துக்கள் எங்களது தனிப்பட்டவை, உறுதியாக நிரூபணமாகாதவை மற்றும் புண்படுத்தும் எண்ணத்தோடு கொணரப்படாதவை. நடுவுநிலையோடு தொடரப்பட்டுள்ளது)
பாகம் 1
தற்கால விடாப்பிடித்தன்மை, பொருந்தாமை மற்றும் ஒழிப்பு
சாதிப்பிரிவினை, நாம் அறிந்ததே, பின் ஒடுக்குமுறைக்கு உதவும் ஒரு ஆயுதமாக ஆனது முக்கியமாக பொருளாதார ஏற்ற இறக்கத்தின் காரணமாகவே. முன்னமே கூறியது போல், தொழில்முறை வைத்து இப்பிரிவினை அமைந்ததால், சிலர் கல்வியிலும், நிர்வாகத்திலும் மற்றும் பொருளாதாரத்திலும் அதிக சக்தி பெற்றனர். மத்தியகால வரலாற்றில், இந்தியா முழுதிலும் இருந்த இந்து ராச்சியங்களை ஆண்ட அரசர்கள் வேதமுறை சாத்திரத்தின் படி கலப்பு திருமணங்களை தடுப்பதை கடமைகளுள் ஒன்றாக கொண்டிருந்தனர். இது அந்த காலங்களில் பொருத்தமானதும் கூட, ஏனெனில் தனிமனித தொழில்கள் பேரரசின் வளர்ச்சிக்கு தலையாய பங்களிப்பு கொண்டிருந்தன. இதில் சமரசம் செய்வது சமூக அமைதியிலும் ஒழுங்கிலும் சமரசம் செய்வதாக இருந்தது. ஆனால் இப்போது அத்தகைய சாதி-குறித்த தொழில்கள் கருத்திற்கொள்ள தேவையில்லை மற்றும் எவராலும் எதனையும் செய்து இக்காலத்தில் உயர முடியும். தொழில்கள் இப்போது முழுதும் சமூகத்தின் செயல்பாட்டிற்கு மட்டும் இல்லாதது பற்பல வெற்றிகரமாக இயங்கும் மனித வாழ்க்கைக்கு தேவையே படாத தொழில்கள் இருப்பதிலிருந்து அறியலாம். சமத்துவமின்மை போதிப்பதும் பின்பற்றுவதும் நவீன கால அரசியல், அரசாங்கம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த கோட்பாடுகளுடன் பொருந்தாது. அதற்காக நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்திட்ட பாரம்பரியமான சாதி அமைப்பு இருத்தலையே தடை செய்வதும் தீர்வல்ல. செய்தால் கலாச்சாரம் எனும் அடையாளம் குலையாமல் செய்வது சாத்தியமில்லை. சாதிகளையும் குலங்களையும் வெறும் தமக்குள் திருமணம் செய்யும் கூட்டங்களாக பார்த்தால் சமத்துவ, சகோதரத்துவ கருத்துக்களை எவ்விதத்திலும் பாதிக்காது. குலங்களை கலைப்பத்திற்கும் வேண்டுமென்றே மக்களை இணைக்கும் முயற்சிகளுக்கும் தேவையே இல்லை; ஆனால் தம் குழுவின் தகுதியை காக்கிறேன் எனும் பெயரில் மற்றோரை கீழாக பாவிப்பதை நீக்க வேண்டும், கலாச்சாரமே குலைந்தாலும் கூட. பலநூறு ஆண்டுகளாக மதத்தோடு பின்பற்றி வரும் நடைமுறைகளை எந்தவொரு நிலையான மற்றும் திட்டமிட்ட முயற்சிகளுமின்றி மக்களாகவே கைவிடுவர் என்றெண்ணுவதும் முட்டாள்தனம். எனவே நாம் செய்ய முடிந்த செயல் இந்த பிரிவுகளை தாண்டி வேலைசெய்யும் இன்னும் பலமிக்க இந்திய நாட்டு அடையாளமும் அதற்கடுத்து மொழியை கொண்டு ஒரு அடையாளமும் உருவாக்குவது ஆகும்.
தற்போதும் விடபிடியாய் இப்பிரிவினை தொடர்வது (ஒரு நாடு முழுதுமான பிரச்னையாக) பெரும்பாலும் ஆங்கிலேய ஆட்சி இந்தியரை சாதி மத அடிப்படையில் பிரித்து இடஒதுக்கம் செய்ததே. அவர்கள் இதனை நிர்வாக சுலபத்திற்கும் பிரித்தாளும் கொள்கையின் அங்கமாகவும் செய்திருக்கலாம். அது எத்தகையதாக இருந்தாலும், அம்முறை குறுகிய நில, குழப்பமான, மாறிக்கொண்டேயிருந்திடும் (ஆம், சாதி அடையாளங்கள் மாற்றம் காண்பவயே) மக்கள் கூட்டங்களை நிரந்தர, தேசம் முழுதும் அங்கீகரிக்கப்படும் பிறப்பால் உறுதிப்படும் அடையாளங்களாக மாற்றியது. மீள நினைக்கும் ஒருவனாலும் இந்த கூண்டிலிருந்து வெளியேற முடியாது. மதம் மாறுவதும் கூட ஒரு போதிய மாற்றாக இல்லை ஏனெனில் மாறியவர்கள் அங்கேயும் இந்து அல்லாத கீழ்மக்களாகவே இருக்க வேண்டியுள்ளது. மாபெரும் மனிதரான அம்பேத்கரும் கூட இவ்விடயத்தில் தவறிழைத்து விட்டதாகவே உணர்கிறோம். எனவே ஒழிப்புமுறை எம்மை பொறுத்தவரை இந்த அடையாளம் எவ்வகையிலும் பயன்படாத, பயன்படுத்தமுடியாத ஒன்றாக மாற்றபடுவதே ஆகும். மேலும் ஆங்கிலேயர் போர்களின் மூலமும் ஒப்பந்தங்கள் மூலமும் தம் எல்லைகளை விரிவாக்கி கொண்டிருந்த காலங்களில், சில இராச்சியங்களில் அங்கமாக இருந்து பெரும் இன்னலகளுக்கு (ஒதுக்குமுறை மூலம்) ஆளாகியிருந்த குலமக்கள், எதிரிகளான ஆங்கிலேயருடன் சேர்ந்துக் கொண்டது அவர்கள் இன்னும் ஒதுக்கப்பட காரணமாக அமைந்தது. உண்மையில் அப்பிரச்னை அந்த குறிப்பிட்ட அரசனோடு முடியவேண்டியதாக இருந்திருக்கலாம். ஆங்கிலேயர் இந்து மதத்துள் மட்டுமின்றி இந்துக்களும் இஸ்லாமிய மக்களும் கொண்டிருந்தத் தொடர்புகளும் கூட பாதிப்படைய காரணமாயிருந்தனர். இதனை இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த பல நிகழ்வுகள் மூலம் அறியலாம். மகாத்மா காந்தி சுதந்தரத்திற்கு பின் உருவாகும் புதிய இந்தியா குறித்து உண்மையாகவும் அதே சமயம் நடைமுறைக்கு உகந்ததாகவுமான பார்வைகளை கொண்டிருந்தார். அவர் இந்தியா கிராமப்புற பொருளாதார நாடாகவும் கிராமங்கள் கொண்டிருக்கும் அத்தனை சமத்துவமின்மைகளும் உடனடியாக அழிக்கப்படாமல் நீண்ட கல்விசார்ந்த முயற்சிகளின் மூலம் வேரெடுக்கபட வேண்டும் என்றும் விரும்பினார். அவர் தீவிர முதலாளித்துவ ஆதரவாளர்களான நேருவும் பட்டேலும் கனவுகண்டு வைத்திருந்த வேகமான தொழிற்சாலைகளும் நகரமயமாக்களும் கொண்ட புதிய இந்தியா குறித்து அனுமானம் செய்து வைத்திருந்தார். அத்தகைய பொருளாதாரம் இடம்பெயர்ந்து நகரங்களை அடையும் புதியவகை நகர்வாழ் சேரிவாசிகளை உருவாக்கும் எனவும் அவர்கள் மனிதனுக்கு தேவையே இல்லாத பல பொருள்களை உமிழ்ந்து தள்ளும் தொழிற்சாலை கழிவுகளில் வாழ நேரிடும் எனவும் பயந்தார். அவர் பயந்தது போலவே திட்டமிடாத நகர விரிவாக்கம் பல இலட்ச கணக்கானோரை பொருளியல் ரீதியில் பின்னோக்கிய ஆரம்பத்தில் வைத்தது மற்றும் அவர்கள் தினசரி தேவைகளை சமாளிக்கவே ஓட வேண்டியிருந்தது. ஆனால் ஆங்கிலேயர் புறப்பட்டு எழுபது ஆண்டுகள் ஆன நிலையில் அவர்களை இன்னமும் குறைகூறி கொண்டிருக்க முடியாது. நாம் ஒடுக்குமுறையினை ஒடுக்கும் முயற்சி எனும் பெயரில் சில கவனசிதறடிப்புகளை செய்துகொண்டுள்ளோம் மற்றும் அதன் பெயர் ஒதுக்கீடு முறை.
ஒதுக்கீடு முறை அம்பேத்கரால் ஒரு இடைக்கால நடவடிக்கையாகவே நோக்கமுறப்பட்டது. இவ்வளவு வருடங்கள் தொடர்ந்த இம்முயற்சியினால் எதிர்பார்த்த பலனான எல்லா விதத்திலும் சமமான சமூகம் பிறந்துவிட்டதா? இல்லை, ஏனெனில் ஏற்றத்தாழ்வுகளின் இருப்பு எல்லா மக்களாலும் நடத்தப்படும் அரசு எந்திரத்தால் அங்கீகரிக்கப்பட்டும் ஒதுக்கீடு வழங்கப்பட்டும் ஆயிற்று. சாதி ஒருவரது வாழ்நாள் முழுதும் எடுத்துச்செல்ல வேண்டிய மற்றும் அடுத்த தலைமுறைக்கு கொடுக்கப்படுகிற பொருளாக ஆகிவிட்டது. இது மோசமில்லை என்றால், சாதியின் இருப்பு காலம் கடக்க இன்னும் பலம் பெறவே செய்கிறதை ஒன்றாக்கப்பட்ட சாதி தொகுதிகள் (பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பல வகுப்புகள்) தங்களுக்குள் பல தேவைகள் மற்றும் போட்டியினால் எதிரித்துவம் கொண்டு போராடுவதும் வன்முறையில் ஈடுபடுவதும் வைத்து அறியலாம். நாம் ஏற்றத்தாழ்வுகளை மறுக்க வேண்டுமே ஒழிய அதை காரணம் காட்டி பொருளாதார மற்றும் திறமை சார்ந்த இடங்களில் இடங்களை ஒதுக்க கூடாது. நாம் இப்போது ஆங்கிலேயர் 19ஆம் நூற்றாண்டில் இந்தியரை பிரித்தாள கையாண்ட யுக்தியினை பின்பற்றி கொண்டிருக்கிறோம். இதுவே ஒரு நவீனத்துவ சமூகத்தை ஒரு தேசத்தின் குடிமக்களாக வளர்க்காமல் சாதி கூட்டங்களின் தொகுதியாக வளர்க்க வேண்டிய நிலைக்கு காரணம். சாதி ஒதுக்கீடு முறைக்கு எதிராக பேசுவதை சமத்துவத்திற்கு எதிரான பேச்சாக எடுத்துக்கொள்ள கூடாது. பேச்சு சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும். ஆனால் சாதி ஒழிப்பில் ஒதுக்கீடு முறை பற்றிய விவாதம் ஒரு சிறு பகுதி மட்டுமே. நிச்சயமாக இம்முறை ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றானாலும், அதற்கு முன் செய்து முடிக்க வேண்டிய காரியங்கள் பல உள்ளன. இதனை குறித்து பேசுவது மட்டுமே ஒரு பெரிய செயலாகும் மற்றும் அது இங்கே (https://kisorishere.blogspot.in/2017/06/a-dream-indianeducation.html) விரிவாக தரப்பட்டுள்ளது. ஒரு மேலோட்டம் இங்கே கொடுக்கிறோம்:
பொது பள்ளி முறை:
- ஒவ்வொரு மாணவனும் நாட்டிலுள்ள எந்த மாணவனும் படிக்கும் தரத்திலான பள்ளியில் ஒரு இடம் பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
- இது மேற்கல்வி துறைகளை தவிர்த்து இருக்கும் ஆனால் அவைகளும் கடுமையான கட்டண விதிமுறைகளும் கொணரப்பட வேண்டும்.
- எல்லா வகையான மேற்கல்வி துறைகளுக்கும் நுழைவு தேர்வு இருக்கும். உயர்கல்வி (,+1, +2) தேர்வு முடிவுகளை ஒரு குறிப்பிட்ட புள்ளிகள் தரபடலாம்.
- எந்த முறையிலும் ஒதுக்கீடு எவர்க்கும் தரபடலாகாது. பொருளாதார ரீதியாக தேவைப்படும் மாணவருக்கு உதவி செய்யப்பட வேண்டும்.
- வரலாறு கல்வி சார்ந்த பாடங்களில் இருந்து பிரிக்கப்பட்டு ஒரு கூடுதல் பாடமாக (extra-credit course) தரப்பட வேண்டும்.
- வரலாறு அரசின் ஆதிக்கத்திற்கு அப்பாற்பட்ட, மதம் சார்ந்த விருப்பு வெறுப்புகளை உட்புகுத்தும் நோக்கமில்லாத, சுதந்திர வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய புத்தகங்களின் மூலம் மாணவர்களால் தாமாக கற்றுக்கொள்ள பட வேண்டும்.
- இந்த படத்தின் மதிப்பீடு முறை ஒரு வரலாற்று நிகழ்வின் தற்கால பின்விளைவை பத்து வயது கடந்த மாணவனிடம் விளக்கக்கூறுமாறு அமையலாம்.
நாம் கல்வி மற்றும் சமமான வாய்ப்புகளே தீர்வாக அமையும் என உறுதியாக நம்புகிறோம். நாம் மனித இனத்தை மனித இனம் மொத்தமாக கொண்டாடுவோம்; மனித கூடங்களாக அல்ல. நாம் நிச்சயம் சாதியினை ஆதரிப்போர் அல்ல.
சாதி சார்ந்த பிரிவினைகள் அழிய வேண்டிய மற்றொரு தேவை உள்ளது. இந்தியா தனது கிராமங்களை பொருளாதாரம் மற்றும் அனைத்து வகைகளிலும் தன்னிறைவு அடைந்த அலகுகளாக மாற்ற வேண்டியுள்ளது. இந்த மாற்றம் கிராம மக்கள் தங்களின் இடத்தின்பால் பற்று கொண்டு ஒன்றாக உணர்ந்தால் மட்டுமே சாத்தியம். இவைகள் தவிர்த்து நாம் அலசாத முக்கியமான அம்சங்கள் ஏராளமாக இருக்கலாம் அல்லது நாம் கூறியுள்ள தீர்வுகளின் நடைமுறை சிக்கல்களை அலசாமல் இருக்கலாம். ஆனால் எல்லாவற்றுக்கும் தீர்வு உண்டு என்பதை மறக்க வேண்டாம்.
பிரிவினையினை கையாள மற்றொரு தவறான யுக்தி வேண்டுமென கலப்பு திருமணங்களை ஆதரிப்பது ஆகும். இச்செயல்கள் கோபமும் வெறுப்பும் வளர மட்டுமே காரணமாகும். இதனாலே (அவ்வாறு அழைக்கப்படும்) சாதி தூய்மையினை காக்க வேண்டிய அவசியமும் எழுகிறது. மக்களை மறக்க செய்வதே வழியே தவிர மறக்க வைக்கிறேன் எனும் பெயரில் மறக்க முடியாத காயங்களை ஏற்படுத்திவிடக் கூடாது. இந்த வாக்கியங்கள் யாரையும் புண்படுத்தும் நோக்கில் சொல்லப்படாதது ஆனால் இதனை கூற இதுவே மிக சூசகமாக தெரிவிக்கும் முறையும் ஆகும்.
Kisor Alaguvel & Pradéep Venkat
Keep visiting and tell us what you think in the comments...
Comments
Post a Comment